
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு நடைபெற்ற ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 18.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. IMG_20230816_184550 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். தமிழக பள்ளிக்கல்வியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ல் தொடங்கி ஏப்.3-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதேபோல, மார்ச் 14-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வும் ஏப்.5ம் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6ம் தேதி தொடங்கி...