
சுதந்திர தின விழாவில் புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு துறைகளில் 55,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிப்பு 77வது சுதந்திர தினத்தையொட்டி, கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து சுதந்திர உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் , இந்தியா என்பது எல்லைகளால் அல்ல, எண்ணங்களால் வடிவமைக்கப்பட வேண்டும்.அனைவரும் விரும்புவது சமத்துவ, சகோதரத்துவ, சமதர்ம இந்தியா .சமூக நீதி, சமத்துவத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. ஏற்ற தாழ்வற்ற அரசை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம். ஒரு கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது . உழைக்கும் பெண்களுக்கான அங்கீகாரமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது இலவச பேருந்து பயணத்தின் மூலம் பெண்களால் மாதம் ரூ. 850 சேமிக்க முடிகிறது என்றார். அத்துடன் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டங்கள் இதோ :- *பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்...