நான்காண்டு பி.எட் பட்டப்படிப்பு அறிமுகம்! ஆகஸ்ட் 16 முதல் மாணவர் சேர்க்கை! தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தில் 6 சிறப்பு பாடப்பிரிவுகளுடன் நான்காண்டு ஒருங்கிணைந்த B.Ed பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நான்காண்டு ஒருங்கிணைந்த B.Ed பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நான்காண்டு பட்டப்படிப்பில் பி.எஸ்.சி., பி.எட், பி.ஏ, பி.எட் ஆகிய பாடப்பிரிவில் ஆறு பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான பி.எட் பட்டப்படிப்பினை படிப்பதற்கு 10+2+3 என்ற அடிப்படையில் இளநிலை பட்டப் படிப்பினை முடித்திருக்க வேண்டும். ஆனால் தேசிய கல்விக் கொள்கையில், இளங்கலை பட்டப்படிப்புடன், பி.எட் பட்டப்படிப்பும் சேர்த்து நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகம் 2023-24 ஆம் கல்வி ஆண்டு முதல் ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எட் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்ப...
Posts
Showing posts from August 14, 2023