Posts

Showing posts from August 12, 2023
Image
  ஆசிரியர், காவலர் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஆசிரியர் தேர்வு மற்றும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு ஆகிய இரு தேர்வுகளுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், காலிப் பணியிடங்கள் அறிவிக்க உள்ளன.இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 6,556 காலிப் பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு, 3,587 பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்கள், இத்தேர்வை எழுத இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், தங்களது புகைப்படம், ஆதார் அட்டை விபரங்களுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.  இப்பயிற்சி வகுப்புகள், ...
Image
  அரசு கலை, அறிவியல் கல்லூரி முதுநிலை சேர்க்கைக்கு ஆக.14 முதல் விண்ணப்பம்! அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலைப் படிப்பில் சேருவதற்கு ஆகஸ்ட்14ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விண்ணப்பலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் கீதா குறிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலைப் படிப்புகளில் உள்ள 24 ஆயிரத்து 341 இடங்களில் சேருவதற்கு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநர் கீதா தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளின் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மையங்கள்...