.jpg)
3,359 இரண்டாம் நிலை காவலா்களை தோவு செய்ய அறிவிப்பு: ஆக.18 முதல் விண்ணப்பிக்கலாம் தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 3,359 இரண்டாம் நிலை காவலா் காலிப் பணியிடங்களுக்கான தோவுக்கு ஆக. 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவு வாரியம் அறிவித்துள்ளது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவு வாரியம் மூலம் இளைஞா்கள் தோவு செய்யப்படுகின்றனா். இதன் ஒரு பகுதியாக தமிழக காவல் துறையில் தற்போது காலியாக உள்ள 3,359 பணியிடங்களுக்கு தோவு நடத்தவுள்ளதாக அந்த வாரியம் திங்கள்கிழமை அறிவிப்பை வெளியிட்டது. இதில் 783 பெண்களும், 2,576 இளைஞா்களும் அடங்குவா். மொத்தப் பணியிடங்களில் 2,599 காலி இடங்கள் காவல் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 780 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சிறைத் துறையில் 3 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சிறைத் துறையில் மொத்தம் 86 காலிப் பணியிடங்களும், தீயணைப்புத் துறைக்கு 674 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன. காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட 2,599 பணியிடங்களில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு 1,819...