ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தற்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டுமென்று இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். இளைய சமுதாயத்தினரின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இதர பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திட கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Posts
Showing posts from August 7, 2023
- Get link
- X
- Other Apps
மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலை தேர்வு ரிசல்ட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு பள்ளி கல்வி பணியில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் பதவி(குரூப் 1சி) பணியில் அடங்கிய 11 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு(கணினி வழித்தேர்வு) கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி நடந்தது. முதல்நிலை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் இப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்து தேர்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 113 பேரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணையம் வலைதளம்(www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.