CBSE - பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவு வெளியீடு. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 2022-23-ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மற்றும் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடத்தப்பட்டது. அதன்படி பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களில் 1,20,742 பேர் துணைத் தேர்வு எழுதினர். இதில் 57,331 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 75 மதிப்பெண்ணுக்கு மேல்402 பேரும், 60 முதல் 75 மதிப்பெண்ணுக்குள் 3,101 பேரும் பெற்றுள்ளனர். அதேபோல், பொதுத்தேர்வில் பெற்றதை கூடுதல் மதிப்பெண் பெற விரும்பி முன்னேற்றத் தேர்வை 60,419 மாணவர்கள் எழுதினர். அதில் 59 சதவீதம் பேர் கூடுதல் மதிப்பெண் எடுத்துள்ளனர். மேலும், 35 சதவீதம் பேர் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண்ணைவிட குறைவாகவும், 6 சதவீதம் மாணவர்கள் அதே மதிப்பெண்ணையும் பெற்றுள்ளதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
Posts
Showing posts from August 2, 2023
- Get link
- X
- Other Apps
TNPSC: குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ள TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுதும் மாணவர்கள் http://tnpscexams.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது குறித்த வெளியான அறிக்கையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி-1) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது. தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
- Get link
- X
- Other Apps
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 224 மாணவர்கள் சேர்க்கை! தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 11 ஆயிரத்து 300 இளநிலைப் பட்டப்படிப்புகளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 224 மாணவர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை சேர்ந்து உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் முறையாக மாணவர் சேர்க்கை கல்லூரி கல்வி இயக்குநர் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதனால் நடப்பாண்டில் கூடுதலாக தேவைப்படும் கல்லூரிகளுக்கு 20% மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 224 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். 45 ஆயிரத்து 965 மாணவர்களும் 56 ஆயிரத்து 259 மாணவிகளும் கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அதேபோல் அரசு பள்ளியில் படித்த 27 ஆயிரத்து 775 மாணவர்கள் புதுமை பெண் திட்டத்தின் மூலம் நிதி உதவி பெறவும் உள்ளனர். நடப்பாண்டில் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி நேரடி வகுப்புகள் துவக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும்...
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்னடைவு.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!! இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தில் அவர்களின் எதிர்காலத்திற்கு பாடங்கள் பயனளிக்கும் விதமாக கல்வி முறையில் தொடர்ந்து புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்நிலையில் மக்களவையில் உயர்கல்வி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர், தமிழகத்தை பொறுத்த வரை 27 மாவட்டங்கள் உயர்கல்வியில் பின்தங்கி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2008 ஆம் நிலவரப்படி அரியலூர், கோவை, திண்டுக்கல், கடலூர், ஈரோடு தர்மபுரி, காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், கரூர், கன்னியாகுமரி, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களாக பட்டியலிடப்பட்டுள்ளது என கூறிஉள்ளார்.