
அதிமுக அரசு எடுத்த கொள்கை முடிவை பின்பற்றும் திமுக அரசு எப்படி திராவிட மாடல் அரசாக இருக்க முடியும்? இன்று(31-07-2023)TET வழக்கில் அதிமுக அரசு 2018 ல் தான் நியமன தேர்வு அறிவித்தார்கள் எனவே அந்த தேதிக்கு பிறகு TET முடித்தவர்களுக்கு தான் நியமனதை தேர்வு வைக்க வேண்டும் 2013,2017ல் TET முடித்தவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும் என வாதிட்டிருக்கிறார்கள். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா IAS அவர்கள் 2018ல் அரசு நியமனத்தேர்வு என்ற policy Decision எடுத்துள்ளது இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். இவர்கள் அதிமுக அரசு எடுத்த கொள்கை முடிவு சரியே என்று சொல்கிறார்கள் போல? நடப்பது திமுக ஆட்சி இல்லை அதிகாரிகள் ஆட்சி தான் நடக்கிறது நாங்கள் வச்சது தான் சட்டம் நாங்கள் அதிமுக கொள்கை தான் கடைப்பிடிப்போம் என்று வெளிப்படையாக கூறி உள்ளது அதிர்ச்சியாக உள்ளது. திமுக கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நாமம் போட்டு உள்ளார்கள் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர். கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு ம...