
ஆசிரியர் பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி கரோனா காலத்தில் முடங்கி இருந்த மாணவ-மாணவிகளை மேம்படுத்தும் விதமாக "ராக்கெட் சயின்ஸ்" என்ற பெயரில் ஆன்லைன் பயிற்சி திட்டம், 2022ஆ-ம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு மூத்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பயிற்சி அளித்தார். தற்போது அதில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களில் சிலர் ரஷ்யாவில் உள்ள "யூரி ககாரின்" விண்வெளி ஆய்வு மய்யத்தை பார்வையிட இருக்கின்றனர். ரஷ்ய விண்வெளி ஏவுதளத்தை பார்வையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 50 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய கலாசார மய்ய வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:- இந்தியாவுக்கு ரஷ்யா அதிக உதவிகள் செய்துள்ளது. அங்கு நம் பள்ளி மாணவர்கள் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. எந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோ...