Posts

Showing posts from July 25, 2023
Image
  நீண்ட நாள் பணிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்க பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு. அரசு பள்ளிகளில் நீண்ட நாள் பணிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்களை சேகரிக்குமாறு, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், மாவட்டந்தோறும் குறைந்தபட்சம், 100 பேராவது அவ்வப்போது, தகவல் அளிக்காமல், நீண்ட நாள் விடுப்பு எடுப்பதும், பின் பணிக்கு வருவதுமாக உள்ளது தெரிய வந்து உள்ளது. சில ஆசிரியர்கள் எந்த தகவலும் இன்றி, ஆண்டுக்கணக்கில் விடுப்பு எடுத்து விட்டு, சம்பளம் மட்டும் பெறுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறைக்கு புகார்கள் வந்துள்ளதால், மாவட்டந்தோறும், நீண்ட நாள் விடுப்பு எடுத்தவர்களை களையெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் வழியே, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில், பள்ளிகளில் நீண்ட நாள் பணிக்கு வராமல், தகவலும் அளிக்காமல் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விபரங்களை, முதன்மை கல்வி அதிகாரிகள் சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
Image
  அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியீடு! அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு 812 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கும்பகோணம், சேலம், மதுரை, நெல்லை ஆகிய கோட்டங்களில் 1602 பணியிடங்கள் உள்ளது. அதில் முதற்கட்டமாக 1402 பணியிடங்களை நிரப்ப போக்குவரத்து வாரியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை ஏற்கும் வகையில் முதற்கட்டமாக கும்பகோணம் கோட்டத்திற்கு 174 பேரும், சேலம் கோட்டத்திற்கு 284 பேரும், மதுரை கோட்டத்திற்கு 136 பேரும், நெல்லை கோட்டத்திற்கு 188 பேரும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என்ற அடிப்படியில் 812 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் அதற்கான கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தமிழ், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்,  கனரக வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும், நடத்துனருக்கான