போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்கள். சமாதானப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி!! பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜூலை 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ஆசிரியர் சங்கங்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை நாளை (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதையேற்று பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையிலான பேச்சுவார்த்தை கூட்டம் நாளை (ஜூலை 25) நடைபெற உள்ளது. இதில் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கலாம். ஒரு சங்கத்தின் சார்பில் ஒருவர் மட்டுமேபங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posts
Showing posts from July 24, 2023
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் ஆசிரியர் பணியிடத்திற்கு போட்டித்தேர்வு கட்டாயம் – அரசு திட்டவட்டம்! தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கட்டாயமாக போட்டித்தேர்வு எழுத வேண்டும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு: தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு தற்போது வரையிலும் பணி நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நேரடி நியமனம் செய்யப்படாது எனவும், போட்டித் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மட்டுமே தகுதியான ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தமிழகத்தில் உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தற்போது முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் திட்டவட்டமாக பதில் அளித்துள்ளார். அதாவது, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
- Get link
- X
- Other Apps
கோரிக்கைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை; தமிழக அரசு மீது ஜாக்டோ ஜியோ அதிருப்தி தமிழ்நாடு நிதித் துறை அமைச்சருக்கு, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், தங்கள் கோரிக்கைகள் குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை என்று அதிருப்தி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். தமிழக நிதி துறை அமைச்சருக்கு, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அவசர கடிதம் ஒன்றை நேற்று முன்தினம் அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன், அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு மற்றும் மகேஷ் ஆகியோர், ஏப்.,8ல் பேச்சு நடத்தினர். இந்த பேச்சு நடந்து, மூன்று மாதம் கடந்து விட்டது. ஆனாலும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து, எந்த முன்னேற்றமும் இல்லை. காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை, மீண்டும் வழங்குவது; பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது போன்ற கோரிக்கைகள் குறித்து, அரசு மவுனமாக உள்ளது. இதனால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அரசுக்கும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும். இதற்கு, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்
- Get link
- X
- Other Apps
நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 26, 27-ல் வெளியாகிறது! நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 26, 27-ல் வெளியாகும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 வரை கணினி வழியில் 2 கட்டங்களாக நடந்த நெட் தேர்வுகளை 6.39 லட்சம் பேர் எழுதினர்.