'அரசாணை 149-ஐ ரத்து செய்க; பணி நியமன ஆணை வழங்குக' - பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் கோரிக்கை! திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, அரசாணை 149-ஐ ரத்து செய்துவிட்டு, 177வது தேர்தல் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 12ஆயிரத்து 483 ஆசிரியர்கள் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். 2013ஆம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் பெறுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் (Teacher Eligibility Test - TET) தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக பணி நியமனம் என்பது வழங்கப்படவில்லை. 2012ஆம் ஆண்டில் முதன்முதலில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மட்டுமே பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் ஆசிரியர் பணி நியமனம் பெற முடியாமல் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்...
Posts
Showing posts from July 23, 2023