Posts

Showing posts from July 16, 2023
Image
  10,12 துணைத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!! நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொள்ளாத நிலையில் அவர்களுடைய நலன் கருதி விரைவில் ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது.  பொது தேர்வு எழுத மாணவர்கள் கட்டாயமாக துணை தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த துணை தேர்வில் எக்கச்சக்கமான மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுடைய வாழ்க்கை பாதிப்படைய கூடாது என்பதற்காக ஜூலை 14ஆம் தேதி அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் சிறப்பு மேலாண்மை கூட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளது.  இந்த கூட்டத்தில் பொதுத்தேர்வு எழுதாத, துணை தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் கலந்து கொள்ளாத மாணவர்களுடைய பெற்றோரை நேரில் அழைத்து உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Image
  புதிய ஆசிரியர்களை நியமிக்க அவகாசம்: அமைச்சர் திருவெறும்பூர் தொகுதியில் பள்ளி கட்டடம், அங்கன்வாடி மையம், பொது சுகாதார வளாகம் உள்ளிட்ட நிறைவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று திறந்து வைத்தார்.காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளியில், பொது சுகாதார வளாகத்தை திறந்து வைத்த அமைச்சர், மாணவ - மாணவியரிடம் கலந்துரையாடினார். மேலும், காலை சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:தமிழக முதல்வரின் கனவு திட்டமான காலை சிற்றுண்டி திட்டம், அடுத்த கட்டமாக, இந்த கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை தேர்வு எழுத வைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளி மேலாண்மை குழுவினரை வலியுறுத்தி வருகிறோம்.  தற்போது, பள்ளி மேலாண்மை குழு மூலமாக, தற்காலிக ஆசிரியர்களை கொண்டு, வகுப்பு நடைபெற்று வருகிறது.  புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான ...
Image
  அரசு பள்ளிகளில் 4,062 காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 2023, ஜுலை 31 பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள பள்ளி முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணக்கர், இளநிலை உதவியாளர் (தலைமையகம்) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிடங்கள் விவரம்: இந்த ஆள்சேர்க்கையின் மூலம் 4062 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முக்கியமான நாட்கள்: விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்குரிய கடைசி நாள்: 2023, ஜுலை 31 விண்ணப்பக் கட்டணம் : பள்ளி முதல்வர் பதவிக்கு ரூ- 2000/-, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ரூ Rs. 1500/, ஆசிரியர் அல்லாத இதர அனைத்து பதவிகளுக்கும் Rs. 1000/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முறை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பம் செய்வது எப்படி உள...