அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்புவது சாத்தியமல்ல! அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்புவது சாத்தியமல்ல. அதனால்தான் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 12ஆயிரம் ஆசிரியர் பணியிங்கள் காலியாக உள்ளது. மேலும், ஆசிரியர்களின் பணி ஓய்வு வயது 60ஆக இருப்பதால், வயது முதிர்வு காரணமாக சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்ற ஆசிரியர்கள், சம்பளத்துக்காக மட்டுமே பணியாற்றி வரும் சூழல் உள்ளது. இதுபோன்றவர்களில் பலர் மாணாக்கர்களுக்கு பாடங்களை நடத்த முடியாத நிலையில், அவ்வப்போது விடுமுறைகளையும் எடுத்து, காலத்தை ஓட்டி வருகின்றனர். இதனால், பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதை சரி செய்ய முயற்சி செய்யாத தமிழ்நாடு அரசு, காலியாக உள்ள பணியிடங்களுக்கு ரூ.8ஆயிரம், ரூ. 10ஆயிரம், ரூ. 12ஆயிரம் என்ற ஊதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுகி...
Posts
Showing posts from July 15, 2023
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: அன்பில் மகேஸ் பேட்டி ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: டெட் தேர்வு, போட்டித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை தொடர்பாக ஏறத்தாழ 20 மணிநேரம் சங்கத்தின் சார்பாக வந்தவர்களிடம் பேசினோம். ஒவ்வொருவரும் கோரிக்கைகள் வைத்துள்ளனர். அதில், நியாயமான கோரிக்கைகளும் உள்ளன. கருணை அடிப்படையில் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. மிக விரைவில் நிதித் துறை அமைச்சர், நிதித் துறைச் செயலர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலருடன் ஆசிரியர் சங்கங்கள் மூலமாக வந்த கோரிக்கைகள் குறித்து பேசவுள்ளோம். அதில், எந்தெந்த கோரிக்கைகள் உடனடியாக செய்ய வேண்டுமோ, அவற்றைச் செய்யப் போகிறோம். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, முதல் முறையாக ஒவ்வொரு பள்ளியிலும் 20 நிமிடங்கள் பள்ளி நூலகத்துக்கு மாணவர்கள் செல்லும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு மாணவர்கள் விரும்புகிற புத்தகத்தை...
- Get link
- X
- Other Apps
சிபிஎஸ்இ பொது தேர்வு தேதி அறிவிப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பள்ளிக்கல்வித் துறை வெளியிடும் ஆண்டு நாட்காட்டியில் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 18-ம் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.8-ம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்து வந்தது. இந்நிலையில், பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட் டுள்ளது. அதன்படி, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்.15 முதல் மார்ச் 21-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.17 முதல் ஏப்.10-ம்தேதி வரையும் பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது.