Posts

Showing posts from July 13, 2023
Image
  புதுச்சேரியில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆரம்பம்; கடைசி தேதி ஜூலை 18.. புதுச்சேரியில்,  MBBS/ BDS/ BAMS/ B.V.Sc & AH (SS & NRI) படிப்புகளுக்கான சேர்க்கை கல்வியாண்டு-2023-24 NEET UG தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து புதுச்சேரி அரசு உயர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் சேர்க்கை குழு (CENTAC) என்று அழைக்கப்படும் சென்டாக் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி உள்ளதாவது, புதுச்சேரியில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவம் / பல் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் புதுச்சேரி அரசு / அகில இந்திய ஒதுக்கீடு (மேலாண்மை)/ என்.ஆர்.ஐ மற்றும் சுய-ஆதரவு (SS) ஒதுக்கீட்டின் கீழ் முதல் ஆண்டு MBBS/ BDS/ BAMS மற்றும் B.V.Sc & A.H படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும். மாணவர்கள் அகில இந்திய கவுன்சிலிங்கில் கலந்துக் கொள்கிறார்கள் என்பதை குறிப்பிட விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது NEET ரேங்கை குறிப்பிட...
Image
  எம்.பி.பி.எஸ் நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!! தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் நடைபெறவிருந்த நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் வரும் ஜூலை 28ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவிருந்த நெக்ஸ்ட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்திடமிருந்து அடுத்த உத்தரவு வரும் வரை நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக நெக்ஸ்ட் தேர்வு செயலாளர் அறிவித்துள்ளார்.   நாடு முழுவதும் தற்பொழுது இயற்கை சீற்றம், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது, மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். ஜூலை 20ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டு இருந்தன.   இந்த நிலையில் காரணம் ஏதும் தெரிவிக்கப்படாமல் எம்பிபிஎஸ் நெக்ஸ்ட் தேர்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த...
Image
  ஜூலை 20 முதல் குருப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு!! தமிழகம் முழுவதும் பல்வேறு நிலைகளில் அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக நடத்தப்படாமல் இருந்து வந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு முதல் மீண்டும் பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்டு வருகிறது. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தெரிவித்துள்ளது.   கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர். இந்தத் தேர்வின் மூலம், 7000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை 10,748 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் 25ம் தேதி வெளியானது. குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 20ம் தேதி முதல் பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெறும்...
Image
  பொறியியல் கலந்தாய்வு. சற்றுமுன் உயர்கல்வித்துறை தேதி அறிவிப்பு..!!! தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார். அதன்படி வருகின்ற ஜூலை 22 முதல் 26 ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை பொது பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர சுமார் 1.80 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் செயற்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே ஐந்தாம் தேதி தொடங்கி ஜூன் நான்காம் தேதி நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.