
சென்னை பல்கலை., தொலைதூர கல்விக்கான மாணவர் சேர்க்கை!! சென்னை பல்கலைக்கழகத்தில் ஜூலை 5 முதல் தொலைதூர கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை.நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை (எம்பிஏ உட்பட), டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை (எம்பிஏஉட்பட), டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கான (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2023-24ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை. நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 1) இளங்கலை / முத...