தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?- டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றன. அதன்படி, கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப்-2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் வரும் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்த ஏப்.28-ம் தேதி வெளியிடப்பட்டது. முதன்மை தேர்வுகள் வருகிற ஆகஸ்டு மாதம் 1- முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இது தவிர, 10 வன பயிற்சியாளர், 178 உதவி பிரிவு அலுவலர், 731 கால்நடை உதவி அறுவைசிகிச்சை நிபுணர், 11 மாவட்ட கல்விஅலுவலர், 9 உதவி வன பாதுகாவலர், 27 நூலகர், 121 வேளாண் அலுவலர் மற்றும் குரூப்-3 பிரிவில் ஒருங்கிணைந்த சிவில் சேவை துறையில் 33 பண...
Posts
Showing posts from July 2, 2023
- Get link
- X
- Other Apps
அரசு வேலைகளில் "முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு" முன்னுரிமை.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.!! தமிழ்நாடு அரசு பணியில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற மானிய கோரிக்கையின் பொழுது முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அப்போதைய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் அடிப்படையில் தற்போது முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கிட முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதே போன்று கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்ப...