
பி.இ. பகுதி நேர பட்டப்படிப்பு விண்ணப்பம் விநியோகம் ஆரம்பம்: ஜூலை 23 வரை அவகாசம்! பகுதி நேர பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 23ஆம் தேதி வரை கால அவகாசத்தை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பட்டயப் படிப்பினை முடித்தவர்கள் 2023 - 2024 கல்வி ஆண்டிற்கான 4 ஆண்டுகள் பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 28 ஆம் தேதி முதல் ஜூலை 23ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லுாரிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 4 ஆண்டு பகுதிநேர பொறியியல் பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவையாவன: அரசு பொறியியல் கல்லூரி - கோவை, கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி - கோவை, அரசு பொறியியல் கல்லூரி - சேலம், அரசு பொறியியல் கல்லூரி - திருநெல்வேலி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி - மதுரை, அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி - காரைக்குடி, தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக்கல்லூரி - வேலூர், அரசு பொறியியல் கல்லூரி -...