புதுச்சேரி முதல்வரின் வீட்டை முற்றுகையிட்ட ஆசிரியர்கள் புதுச்சேரியில் இடமாற்றல் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி வீட்டை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அரசின் கல்வித் துறையில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட புதுவையைச் சேர்ந்த ஆசிரியர்கள் காரைக்கால் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் காரைக்காலில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவர்கள் தங்களை மீண்டும் சொந்த பிராந்தியமான புதுச்சேரிக்குப் பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் கல்வித்துறை, கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய பணியிட மாறுதல் கொள்கையை வெளியிட்டது. இதற்கு ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பணி மூப்பு அடிப்படையில்தான் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். புதிய இடமாற்றல் கொள்கையில் முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை வளாகத்தில் நேற்று முன்தினம் ஒன்று கூடி, பணியிட மாறுதல் விவகாரத்தில் சம்மேளன
Posts
Showing posts from June 26, 2023
- Get link
- X
- Other Apps
Engineering Admission : பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; முதல் மூன்று இடங்களிலும் மாணவிகள் அசத்தல்! 2023 -2024ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழத்தில் கீழ் செல்லப்படும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு ரேங்க் லிஸ்ட் எனப்படும் மதிப்பெண் தரவரிசை வெளியிடப்பட்டது. பொறியியல் படிப்பில் சேர்வதற்காக மாணவர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரேங்க் லிஸ்ட் வெளியானது. இந்த பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம பேசுகையில், இந்தாண்டு 1,87,847 ஆயிரம் பேருக்கு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தாண்டைவிட, சுமார் 18 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். அரசுப்பள்ளி ஏழை மாணவர்களுக்கு 7.5 இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதில் 31,445 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், 15,136 மாணவர்களும், 13,284 மாணவிகளும் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம் கிடையாது என தெரிவித்தார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கடந்தாண்டு 28,425 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இந்தாண்டு 5,842
- Get link
- X
- Other Apps
' காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்'... நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!! வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம், மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதற்கு தணிக்கையாளர் சச்சிதானந்தம் வரவேற்ற நிலையில், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத்தலைவர் அ.சேகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா ஆகியோர் தலைமையில் பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர் (தொழிற்கல்வி) ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத அமைச்சுப் பணியாளர்கள் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தி, தொழிற்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்தனர். இத
- Get link
- X
- Other Apps
அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 30,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ராமதாஸ்! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 30,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துநர்களில் 700 பணியாளர்கள் சில நாட்களில் ஓய்வுபெற உள்ளனர். ஒரே நேரத்தில் 700 பணியாளர்கள் ஓய்வு பெற்றால் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கும் என்று கூறியுள்ளார்.