
TN 10th Retotaling Result: 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு; பார்ப்பது எப்படி? 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று (ஜூன் 22) பிற்பகலில் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மதிப்பெண்களில் மாற்றம் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்து, மறு கூட்டல் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றன. தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். முதலில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான அன்று, இந்த தேர்வு முடிவுகள் தேதி 19 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. 9,14, 320 மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வில் 8,35, 614 பேர் தேர்ச்சியடைந்தனர். சுமார் 78,706 பேர் தோல்வியடைந்தனர்....