
நீட் தேர்வில் புதுவையில் 3,140 மாணவர்கள் தேர்ச்சி - கடந்த ஆண்டை விட 2.15% உயர்வு நீட் தேர்வில் புதுச்சேரியில் 3,140 மாணவ, மாணவி கள் தேர்ச்சி அடைந்தனர்.கடந்த ஆண்டை விட 2.15 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மே 7-ம் தேதி நடந்தது. இதில், புதுவையில் 5 ஆயிரத்து 714 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் தேசிய தேர்வு முகமை இணையத்தில் வெளியானது. புதுவையை சேர்ந்த 3 ஆயிரத்து 140 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை மாணவர் அசோக்குமார் 720-க்கு 700 மதிப்பெண் எடுத்து அகில இந்திய அளவில் 287-வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட 2.15 சதவீத புதுவை மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆளுநர் தமிழிசை வாழ்த்து: இந்நிலையில் ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்தமாணவன் பிரபஞ்சன் மற்றும் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் 4 இடங்க ளைப் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சே...