தமிழ்ப் பல்கலையில் பி.எட்., எம்.எட். நேரடி சேர்க்கை! தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2023 - 2024ஆம் கல்வியாண்டுக்கான பி.எட்., எம்.எட். நேரடிச்சேர்க்கை தொடங்கி நடைபெறுகிறது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) சி. தியாகராஜன் தெரிவித்தது: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.) இரண்டாண்டு முழுநேரப் பட்டப் மேற்படிப்பில் 2023 - 2024 ஆம் கல்வியாண்டுக்கான நேரடிச் சேர்க்கை ஜூன் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டது. சேர்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் ஜூலை 31 வரை நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியிலும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்திலும், 04362 - 226720 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
Posts
Showing posts from June 15, 2023
- Get link
- X
- Other Apps
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன விவகாரம் ஆசிரியர் தேர்வாணைய தலைவர் ஆஜராக உத்தரவு முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன விவகாரத்தில், ஆசிரியர் தேர்வாணைய தலைவர் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் சார்பில் 387 முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வேதியியல்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2017ல் வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வில் தவறான வினா-விடை இடம் பெற்றதாக சிலர், கடந்த 2017ல் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தவறாக கேட்கப்பட்ட வினா எண் 14, 43, 63 மற்றும் 72 ஆகியவற்றிற்கு தலா ஒரு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து, டிஆர்பி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இதில், சம்பந்தப்பட்ட தேர்வெழுதியவர்களின் கோரிக்கையை பரிசீலித்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அனுமதித்து பணி வழங்க உத்தரவிடப்பட்டது. இதனிடையே, இதே விவகாரத்தில் தாரணி என்பவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால், தாரணி தரப்பில் சீராய்வு மனு செய்யப்பட்டி...