Posts

Showing posts from June 13, 2023
Image
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  கடந்த ஆண்டு தமிழகத்தில் 57,250 மாணவர்கள் தேர்ச்சியடைந்திருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மே 7ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை 1.44 லட்சம் மாணவர்கள் எழுதினர்.  தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 99.99 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.  NEET EXAM RESULT LINK:  https://neet.nta.nic.in/ https://ntaresults.nic.in/
Image
  NEET UG Results 2023: வெளியானது நீட் தேர்வு முடிவுகள்; தெரிந்து கொள்வது எப்படி? முழு விவரம்! இளங்கலை மருத்துவப் படிப்புகள் சேர 2023-ம் ஆண்டுக்கான நீட் இளங்கலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள், ஆயுஷ் படிப்புகளுக்கு (சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி) நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.  நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 6-ம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நிறைவடைந்து, ஏப்ரல் 6ஆம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தேசியத் தேர்வுகள் முகமை மீண்டும் விண்ணப்ப அவகாசத்தை நீட்டித்தது. இதன்படி, நீட் தேர்வை எழுத மாணவர்கள் மீண்டும் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பித்தனர். நீட் தேர்வு முடிவுகள் https://neet.nta.nic.in/- என்ற இணைப்பை க
Image
  நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!! இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உட்பட எந்த வகையான மருத்துவ படிப்புகளை படிக்கவும் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். மருத்துவபடிப்புக்களுக்கான நுழைவு தேர்வை ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு தனித்தனியாக இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியாகலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு 499 நகரங்களில் மே 7ம் தேதி நடத்தப்பட்டது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முறைகேடுகள் நடைபெறாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தடுப்பு முறைகளும் மேற்கொள்ளப்பட்டன.  இந்நிலையில், நாடு முழுவதும் பெரும்பாலான நுழைவுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியான நிலையில், நீட் தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. இதனால் எப்போது முடிவுகள் வெளியாகும் என கேள்வி எழுந்து வரு