ரத்து ஆகிறதா பிளஸ் 1 பொதுத் தேர்வு? பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு நடமுறையில் இருந்தது. ஆனால் வணிக அந்தஸ்தை உயர்த்தவும், பெரும்புகழ் அடையவும் விரும்பும் தனியார் பள்ளிகள் 100 சதவீத ரிசல்டிற்காக 10-ஆம் வகுப்பு பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலேயே தொடங்கி நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே போல் 12-ஆம் வகுப்பு பாடத்தை 11-ஆம் வகுப்பிலேயே சில தனியார் பள்ளிகள் நடத்த தொடங்கிவிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சில தனியார் பள்ளிகளின் இத்தகைய நடவடிக்கைகளால் மாணவர்கள் முறையான கல்வியை பெற முடியாததோடு மதிப்பெண்ணை மட்டுமே நோக்கமாக கொண்ட பந்தயத்திற்கு தயாராவதாக 12-ஆம் வகுப்பு மாறிப்போனது. இதன் அபாயம் குறித்து கல்வியாளர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்த நிலையில் தனியார் பள்ளிகளின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தும் விதமாக 11-ஆம் வகுப்பு தேர்வையும் பொதுத்தேர்வாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்டாலும் தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வை சந்திப்பதால் மாணவர்கள் மிகுந்த அழுத...
Posts
Showing posts from June 10, 2023