புதுச்சேரி: காவலர் எழுத்து தேர்வு முடிவு வெளியீடு! புதுச்சேரி மாநில காவலர்கள் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானது. புதுச்சேரி மாநில காவல்துறையில் காலியாக உள்ள 253 காவலர்கள் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற எழுத்து தேர்வை 3,000-க்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இந்த நிலையில், காவல்துறையில் காலியாக உள்ள 253 காவலர்கள் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், போலீஸ் தலைமையகம் முன்பு ஒட்டபட்டுள்ளது.
Posts
Showing posts from June 8, 2023
- Get link
- X
- Other Apps
முக்கிய அறிவிப்பு..!! 10 ஆம் வகுப்பு கணித பாடத்தில் இருந்து இந்த பகுதி நீக்கம்..!! தமிழ்நாடு அரசின் மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஒருவழியாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து பள்ளி பாடப் புத்தகத்தில் ஆன்லைன் ரம்மி தொடர்பான சில வகுப்புகளில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு இருந்தன. ஆறாம் வகுப்பில் இதுதொடர்பாக இடம்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பாடப்பகுதி ஏற்கனவே நீக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது 10ம் வகுப்பு கணித பாடத்தில் ஃபிளையிங் கார்ட்ஸ் சம்ஸ் என்ற பிரிவில் சீட்டுக்கட்டு கணக்குகள் இடம் பெற்றுள்ளது. இந்த கணக்குப் பகுதியானது கடந்த கல்வியாண்டில் அமலில் இருந்த நிலையில் வரக்கூடிய கல்வியாண்டில், பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கு பதிலாக வேறு புதிய பகுதி சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.