அரசாணை 149ஐ நீக்கி விட்டு தகுதித்தேர்வில் வென்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு பத்தாண்டுகளாக ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. 2018ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட பள்ளிக்கல்வித் துறையின் 149ம் எண் அரசாணையை ரத்து செய்து ஆணையிட்டாலே போதுமானது. இந்த நோக்கங்களை நிறைவேற்றும் வகையிலும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் அரசாணை 149ஐ நீக்கி விட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். அத்துடன், ஏற்கனவே இருந்தவாறு ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 57ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Posts
Showing posts from June 7, 2023
- Get link
- X
- Other Apps
தமிழகம் முழுவதும் 66,70,825 பேர்... தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியீடு! தமிழகம் முழுவதும் 66,70,825 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு. தமிழகத்தில் முழுவதும் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும், சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாநில தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. மேலும், சென்னையில் கூடுதலாக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி வருகிறது. இதில், பட்டப் படிப்பு வரையான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், முதுநிலை படிப்பு, பொறியியல், மருத்துவம் உட்பட தொழில் படிப்பின் தகுதியை சென்னை அல்லது மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வரவேண்டும். இந்த சமயத்தில் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் 66,70,825 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்ப
- Get link
- X
- Other Apps
TNPSC குரூப் 4.. 20,000 பணியிடங்களை உடனே நிரப்புக.. இபிஎஸ் வலியுறுத்தல்.!!!! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு சுமார் 10,000 தொகுதி-4காலி பணியிடங்களுக்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் இ பி எஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் தற்போது 25 ஆயிரம் ஆக உயர்த்தி இருப்பதாக செய்திகள் வருகின்றன. எனவே 2022 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வுக்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் இருந்து சுமார் 20000 தகுதி பெற்ற தேர்வர்களை ஆவது தேர்ந்தெடுத்து காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை ஆவது நிரப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
- Get link
- X
- Other Apps
NEET UG 2023 Result: நீட் தேர்வு முடிவுகள் எப்போது?- தகவல் வெளியிட்ட என்டிஏ 2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 2ஆவது வாரத்தில் வெளியாகும் என்று தேர்வுகளை நடத்திய என்டிஏ நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பு ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இதில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் மட்டுமே, மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள் ஆவர். நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, கலந்தாய்வில் உரிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும். நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 6ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நிறைவடைந்து, ஏப்ரல் 6ஆம்