Posts

Showing posts from June 4, 2023
Image
  இடைநிலை ஆசிரியா் பயிற்சிப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசத்தில் இயங்கி வரும் அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியா் பயிற்சிப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து இந்த நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மரக்காணத்தை அடுத்த பிரம்ம தேசத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 2023-2024-ஆம் கல்வி ஆண்டுக்கான இருஆண்டு இடைநிலை ஆசிரியா் பயிற்சி படிப்புக்கு மாணவா் சேர்க்கை நடைபெற உள்ளது.  இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் ஜூன் 5 (திங்கள்கிழமை) முதல் வரும் 15-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க இயலாத நிலையில் இருப்பவா்கள் பிரம்மதேசம் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம்.  எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250, பொதுப் பிரிவினருக்கு ரூ.500 ஆகும். மேலும் கூடுதல் விவரங்களை அறிய 63803 25605, 88385 92396 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆசிரியா் பயிற்சி நிறுவனம் தெரிவ...