
TNEB 54 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – உடனே நிரப்ப வலுக்கும் கோரிக்கை! தமிழகத்தில் மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் அதனை உடனே நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது காலிப்பணியிடங்கள் அறிவிப்பு தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதனால் பல இடங்களில் உயர் மின்னழுத்தம் காரணமாக வேலை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் மின் வாரியத்தில் கள பிரிவில் 40 ஆயிரம் பணியிடங்கள், உதவி பொறியாளர் உட்பட மொத்தம் 54 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த பணியிடங்கள் அனைத்தும் மின் வாரியம் மூலம் நடத்தப்படும் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் காரணமாக பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கள பிரிவு ஊழியர்களை மின் வாரியம் நியமிக்க அரசு அனுமதி அளித்து 10,200 பேரை தேர்வு செய்ய 2022 ஆகஸ்ட் மாதம் அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் 9 மாதங்கள் ஆன நிலையில் அனுமதி வழங்கமால் இருப்பதால் காலி ப...