அரசு சார்பில் காவல்துறை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.! ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.! அரசு சார்பில் காவல்துறை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.! ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.! இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காவல்துறையில் காலியாக உள்ள 621 உதவி ஆய்வாளர் பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் காலியாக உள்ள 129 நிலைய அதிகாரி பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) இத்தேர்வு நடத்தப்படும். இத்தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 8012120115 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். சேலம் மாவட்
Posts
Showing posts from June 2, 2023
- Get link
- X
- Other Apps
TNTRB மூலம் தமிழகத்தில் 4000 பேராசிரியர்கள் நியமனம்.. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.!!! தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் இந்த வருடம் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனைப் போலவே வழக்கமாக இருக்கும் மாணவர் சேர்க்கையை விட இந்த வருடம் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இருந்தாலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேராசிரியர்கள் இல்லை என்பதால் உடனே பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நான்காயிரம் பேராசிரியர் பணியிடங்களை நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- Get link
- X
- Other Apps
சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு TNPSC., தேர்வு அறிவிப்பு தமிழகத்தில், 245 உரிமையியல் என்ற சிவில் நீதிபதிகள் பதவிக்கு, டி.என்.பி.எஸ்.சி., எனும் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக உரிமையியல் நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி பதவிக்கு, 2018ல் 222 பேரும், 2019ல் 56 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின், நான்கு ஆண்டுகளாக தேர்வு நடத்தவில்லை. இந்நிலையில், 245 நீதிபதி பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நேற்று தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் ஆக., 19ல் முதல் நிலை தகுதி தேர்வும், அக்., 28, 29ம் தேதிகளில் பிரதான தேர்வும் நடக்க உள்ளன. இதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. வரும், 30ம் தேதி நள்ளிரவுக்குள் விண்ணப்பங்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம். தங்களது கல்வி மற்றும் இதர தகுதிக்கான சான்றிதழ் ஆவணங்களை விண்ணப்பிக்கும்போதே, ஆன்லைனில் பதிவேற்ற வேண்டியது கட்டாயம். முதல் நிலை தகுதி தேர்வு, 100 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி நேரம் நடத்தப்படும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான விடைக்கு, 0.10 மதிப்