Posts

Showing posts from May 31, 2023
Image
  புதுச்சேரியில் பழைய முறையில் ஆசிரியர் நியமனம்: முதல்வர் ரங்கசாமி தகவல் புதுச்சேரியில் ஆசிரியர் நியமனத்தில் விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு பழைய முறையில் ஆசிரியர் நியமனம் நடைபெறும்' என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் ஆரம்பப் பள்ளிக்கு 146 ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர். அவர்களை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதா? அல்லது தேர்வு நடத்தி தேர்வு செய்வதா? என அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என்று கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருந்தார். ஆசிரியர்களை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய உரிய அறிவிப்பை வெளியிடுமாறு சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அதிமுகவினர் வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுவையில் ஆசிரியர்கள் மதிப்பெண் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி தேர்வு அடிப்படையில் ஆசிரியரை நியமிக்க உத்தரவிட்டுள்ளார். ஆகவே, தற்போது ஆசிரியர் நியமனம் தொடர்பாக அமைச்சரவையில் கொள்கை முடிவெடுக்கும் நிலையுள்ளது. விரைவில் கொள்கை முட...
Image
  என்றைக்கு ஆசிரியர்கள் கையில் பிரம்பு கீழே விழுந்ததோ அன்றே மாணவர்களின் ஒழுக்கம் போச்சு.. பேரரசு என்றைக்கு ஆசிரியர்கள் கையில் இருந்த பிரம்பு கீழே விழுந்ததோ அன்றைக்கே மாணவர்களின் ஒழுக்கம் போச்சு என இயக்குநர் பேரரசு ஆவேசமாக பேசியுள்ளார். ஜேஆர்ஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் என். ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள லைசென்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ கருப்பையா, அபி நட்சத்திரா,வையாபுரி, நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. இந்த விழாவில் சிங்கர் ராஜலட்சுமி, இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசுகையில் இன்று ஸ்கூல் படிக்கிற பசங்கள் எல்லாம் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அது போல் பெண் பிள்ளைகளும் கையில் பீர் பாட்டிலுடன் போட்டோ எடுத்து போடுறாங்க. இதையெல்லாம் பார்க்கும் போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. பெண் பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். இதெல்லாம் எப்படி நடக்குது. இதற்கெல்லாம் ஒ...
Image
  ஒரே நேரத்தில் பல்கலை. தேர்வு முடிவுகள்!! தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வரும் காலங்களில் தேர்வும், தேர்வு முடிவுகளும் ஒரே நாட்களில் அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர்களோடு அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். 2023-24 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, பாடத்திட்டம் மாற்றியமைப்பு, பல்கலைக்கழகங்களில் கட்டண நிர்ணயம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 19 பல்கலைக்கழக துணைவேந்தர்களும், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடம் 4 செமஸ்டர்களிலும் கட்டாயம் பின்பற்றப்படும் என்றும், தமிழுக...
Image
  10,200 பேருக்கு வேலை அரசு அனுமதி தர தாமதம் தமிழக மின் வாரியத்தில் கள பிரிவில் 40 ஆயிரம் பணியிடம் உட்பட மொத்தம் 54 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. உதவி பொறியாளர் உட்பட அனைத்து பதவிகளுக்கும் மின் வாரியமே நேரடியாக தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்தது.கடந்த 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் 'பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்' என தமிழக அரசு அறிவித்தது. கள பிரிவு ஊழியர்களை மின் வாரியம் நியமிக்க அரசு அனுமதி அளித்தது. எனவே கள பிரிவில் 10 ஆயிரத்து 200 பேரை தேர்வு செய்ய 2022 ஆகஸ்டில் தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஒன்பது மாதங்களாகியும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் காலி பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. விரைவில் 10,200 பேருக்கு வேலை அரசு அனுமதி தர தாமதம் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Image
  ஒரே நேரத்தில் 1.70 லட்சம் ஆசிரியர்களுக்கு பணி.! பீகார் அரசு அதிரடி அறிவிப்பு.! கல்வித்தரத்தை உயர்த்த ஒரே நேரத்தில் 1,70,461 ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளதாக, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். நிதி ஆயோக் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, நாடு முழுவதும் உள்ள 20 மிகப்பெரிய மாநிலங்களில் கல்வித்தரத்தில் 19வது இடத்தில் பீகார் உள்ளது. இந்நிலையில், முதன்மை ஆசிரியர்: 79943 பேர், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்: 32916 பேரும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்: 57602 பேர் என மொத்தம் 1,70,461 ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த காலிபணியிடங்களுக்கு பீகார் மாநிலத்தில் இருக்கும் தகுதியுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணபிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் bpsc.bihar.gov.in என்ற BPSC இணையத்தில் சென்று விண்ணபிக்கலாம்.