
TNPSC Group 4: அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்... டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித் தேர்வர்களின் குரல் அரசை எட்டுமா? 73.6 லட்சம் - இது என்ன எண் தெரியுமா? அரசாங்க வேலைக்காக விண்ணப்பித்துவிட்டுக் காத்திருப்போரின் எண்ணிக்கை. இவர்களில் முதுகலை பொறியியல், மருத்துவம், சட்டம் முடித்தோரும் உண்டு. தனியார் துறைகளில் உச்சப் பதவியில் இருப்பவர்கள்கூட எந்தத் தருணத்திலும் தூக்கி எறியப்படக்கூடிய அபாயத்தில் இருக்கும்போது, அரசு வேலைகளின் பாதுகாப்பான பணி சூழலும், பொருளாதார மீட்பும் மக்களை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன. முக்கியமாக, அதிகாரத்தை நோக்கிய பயணமாகவும் அரசுப்பணி அமைகிறது. அதனால்தான் 'தமிழ்நாடு அரசு வேலை தமிழர்களுக்கே' என்ற முழக்கம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இதை முன்னிறுத்தி வருகின்றனர். இதனால் அரசுப்பணி மீதான ஆர்வமும் மோகமும் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசுப் பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன்படி குரூப் 4 தேர்வு...