Posts

Showing posts from May 25, 2023
  பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்! நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு! தமிழகத்தில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கும், ஜூன் 5-ம் தேதியில் இருந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகள் திறக்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பள்ளி பேருந்துகள் முறையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல் சைக்கிள், லேப்டாப் வழங்கவும், பள்ளி திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பை ஜூன் மாதம் இரண்டாம் வாரத்திற்கு ஒத்திவைக்க கோரி, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் காணொளி மூலம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தமிழ் கட்டாய பாடம்" என்பதை தனியார் பள்ளிகளில் பின்பற்றுகிறார்களா? தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், அரசுப் பள்ள
  அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதையடுத்து உயர்கல்விக்கு சேருவதற்கு மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர்.  தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 8 முதல் 22 ஆம் தேதி வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் அதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  https://collegeportal.tngasa.in என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை கல்லூரி முதல்வர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள து.
  நீட் - 2023 தேர்வு முடிவுகள் எப்போது? மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான நீட் - 2023 தேர்வை மே 7ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்தியது. அதுமுதல், நீட் தேர்வெழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். நீட் தேர்வு முடிவுகள் www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஜூன் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல ஆயிரக்கணக்கான மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போகும் நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்பட்சத்தில், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்கு எந்த அரசுக் கல்லூரியில் சேர்க்கை கிடைக்கும் என்பதை முடிவெடுக்கவும்,  தோல்வி அடைந்தவர்கள், அடுத்து வேறெந்த கல்வியில் சேரலாம் என்பது குறித்து முடிவெடுக்கவும் வசதியாக இருக்கும். தமிழகத்தில், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கியிருக்கும் நிலையில், நீட் தேர்வெழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
  இந்திய அஞ்சல்துறையில் 12,828 காலியிடங்கள்: எந்த தேர்வும் இல்லை; உடனே விண்ணப்பியுங்கள்! நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான (Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.  இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 12,828 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எவ்வித எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வானவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வயது வரம்பு: குறைந்தபட்ச வயது - 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்) அதிகபட்ச வயது - 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்) பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்)