
TN 10th,11th Supplementary Exam : 10,11ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி வெளியானது. ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 9,14,320, மாணவிகளின் எண்ணிக்கை 4,55,017, மாணவர்களின் எண்ணிக்கை 4,59,303 ஆகும். 8,35,614 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 4,04,904, மாணவிகள் 4,30,710 பேர் ஆவர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்கள் இன்று(மே 23) முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் மே 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு ஜூன் 27ம்...