B.Sc., Agriculture படிக்க விரும்பும் அனைவரும் அவசியம் முழுவதுமாக படிக்க வேண்டிய பதிவு... தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) வழங்கும் பட்டப்படிப்புகள் பிளஸ்டூ (+2) முடித்தபின் வேளாண்மைப் படிப்புகள் இந்திய அளவிலும், உலகளாவிய நிலையிலும் வேளாண்மைக் கல்வியில் முதன்மைக் கல்வி நிறுவனமான கோயம்புத்தூரில் உள்ள ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்’’ படிப்புகள் : 1. இளம் அறிவியல் (வேளாண்மை) - B.Sc. (Agriculture) 2. இளம் அறிவியல் (தோட்டக்கலை) - B.Sc. (Horticulture) 3. இளம் அறிவியல் (வனவியல்) - B.Sc. (Forestry) 4. இளம் அறிவியல் (உணவு, ஊட்டச்சத்தியல், உணவு முறையியல்) - B.Sc. (Food, Nutrition, Food Systems) 5. இளம் அறிவியல் (பட்டு வளர்ப்பு) - B.Sc. (Sericulture) 6. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை பொறியியல்) - B.Tech. (Agricultural Engineering) 7. இளம் தொழில்நுட்பம் (தோட்டக்கலை) - B.Tech. (Horticulture) 8. இளம் தொழில்நுட்பம் (உயிர் தொழில்நுட்பவியல்) - B.Tech. (Bio Industrial Technology) 9. இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல்) - B.Tech. (Energy and Environment) 10. இளம் த...
Posts
Showing posts from May 22, 2023
- Get link
- X
- Other Apps
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க: தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 2011-12 ஆம் கல்வி ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அரசாணை எண் 177ன்படி (11.11.2011) 15,169 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் உடற்கல்வி, கணினிப் பயிற்சி, தையல், இசை, ஓவியம், தோட்டக் கலை, கட்டடக் கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகிய பாடப் பிரிவிகளில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தங்கள் பணியை நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 12 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும், பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஈடுபட இருக்கிறது. வாழ்வாதாரத்திற்காக போராடி வரும் இவர்களின் கோரிக்கையை ஏற்று இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து தருமாறு தமிழ்நாடு அரசிடம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என...
- Get link
- X
- Other Apps
தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு.. நாளை (மே 23) குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை...!!! சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் நாளை குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் விதமாக 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் 653 சிறுபான்மையற்ற தனியார் சுயநீதி பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நாளை காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
பாலிடெக்னிக் கல்வி என்றால் என்ன? Polytechnic Diploma பாலிடெக்னிக் (Polytechnic) என்பது பொறியியலில் பட்டயப்படிப்பை (டிப்ளோமா) வழங்கும் கல்வி நிறுவனமாகும். இதை தமிழில் “பலவகை தொழில்நுட்ப கல்லூரி” என்றழைக்கலாம். ஒரு மாணவரின் நடைமுறை மற்றும் தொழில்நுட்பத் திறமையை வளர்க்கும் விதமாக, தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனம் பாலிடெக்னிக். இந்தியாவில், பாலிடெக்னிக்குகள் என்பவை, மாநில அரசுகள் மற்றும் தனியார்களால் நடத்தப்படுகின்றன. தனியார் பாலிடெக்னிக்குகளைப் பொறுத்தவரை, அரசு உதவிப் பெறுபவை மற்றும் சுயநிதி என்ற 2 பிரிவுகள் உள்ளன. பாலிடெக்னிக் எந்தளவிற்கு பிரபலம் வாய்ந்தது? பொறியியல் கல்லூரிகளில் அதிக இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் சூழலிலும், பலவிதமான கல்வி நிறுவனங்கள் முளைத்து பலவிதமான படிப்புகளை வழங்கி வரும் நிலையிலும், பாலிடெக்னிக் படிப்புதான் சிறந்தது என்று சொல்வது கடினம்தான். சிறப்புத்தன்மை மற்றும் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, பாலிடெக்னிக் பட்டதாரிகள் பணி செய்கிறார்கள். உதாரணமாக, ஒரு பாலிடெக்னிக் பட்டதாரி, ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் இடத்தில் பணிபுரிபவராக இருக்கிறார். அதேச...