Posts

Showing posts from May 20, 2023
Image
  தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் சேர்க்கை அறிவிப்பு இதுகுறித்து, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு: தமிழக உயர்கல்வித்துறையின் கீழ், மொத்தம், 51 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1.62 லட்சம் இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், www.tnpoly.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பகுதி நேர நான்காண்டு படிப்புக்கும், விண்ணப்பிக்கலாம். இதற்கு பதிவு கட்டணம், 150 ரூபாய் ஆகும். பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, கட்டணம் இல்லை.  பாலிடெக்னிக் சேர்க்கை தொடர்பான கூடுதல் விபரங்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.
Image
  மாநில கல்விக் கொள்கை: புதிதாக 2 உறுப்பினர்கள் நியமனம்.!!! செப்டம்பர் மாத இறுதிக்குள் மாநில கல்விக் கொள்கை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘டாக்டர் ஃப்ரீடா ஞான ராணி, பேராசிரியர் பழனி ஆகியோர் மாநில கல்வி கொள்கையை வகுக்க புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை கிடைத்ததும் கவனமுடன் பரிசீலித்து சிறப்பான கல்விக் கொள்கையை அரசு வகுக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
Image
  புதுச்சேரி: சென்டாக் கலந்தாய்வு.. மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடங்கியது.. இளநிலை, இளங்கலை படிப்புகளில் சேர சென்டாக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது நேற்று முதல் தொடங்கியுள்ளது. சென்டாக் விண்ணப்பம் செய்ய புதுவையில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் அரசு இடஒதுக்கீட்டில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தற்போது பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் சென்டாக்கிற்கு விண்ணப்பிப்பது தொடங்கப்படாமல் இருந்தது. விரைவாக மாணவர் சேர்க்கையை தொடங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியான வந்து கொண்டிருந்தது.   அதன் காரணமாக தற்போது உயர்நிலை மாணவர் சேர்க்கைக்கு சென்டாக்கில் விண்ணப்பிப்பது நேற்று தொடங்கியது. இது தொடர்பாக கல்வித்துறை பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். நீட் தேர்வு அல்லாத படிப்புகள் 2023ம் கல்வியாண்டிற்கான நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளான பி.டெக், பி.எஸ்சி, பிசியோதெரபி, பி.பார்ம், பி.ஏ. எல்.எல்.பி, மற்றும் பட்டய படிப்புகள், இளங்கலை அறிவியல் ம...
Image
 "வட மாவட்ட பள்ளிகளில் குறைந்த அளவில் ஆசிரியர்களும், கட்டமைப்புகளும் இருப்பது திட்டமிட்ட துரோகம்" - ராமதாஸ் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் கடந்த 44 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் அனைத்துமே கடைசி இடங்களைத் தான் பிடிக்கின்றன என்றால் அது அந்த மாவட்டங்களின் தவறு அல்ல... மாறாக தமிழகத்தை ஆளும், ஆண்ட கட்சிகளின் தோல்வி தான். வட மாவட்ட பள்ளிகளில் குறைந்த அளவில் ஆசிரியர்களும், கட்டமைப்புகளுமே உள்ளன என்றால் அது திட்டமிட்ட துரோகம் தானே?' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டை விட சற்றுக் கூடுதலாக இந்த ஆண்டில் 91.39 விழுக்காடு மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். பத்தாம் வகுப்பு பொத...