
பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர வேண்டுமா? விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குவதாக அறிவிப்பு! பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியான நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் மாணவர்கள் 4,55,017, மாணவிகள் 4,59,303 தேர்வு எழுதினர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில், வரும் கல்வியாண்டிற்கான பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நாளை தொடங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்வதற்கான கல்வித் தகுதி : முதலாமாண்டு பட்டய படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பு த...