
TNEA 2023: பொறியியல் கவுன்சலிங்; எந்த கோர்ஸ் படிக்கலாம்? வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் எவை? பொறியியல் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டவுன் உங்களுக்கு எந்த ரவுண்ட் கவுன்சலிங் வரும் என்பது தெரிந்துவிடும். மாணவர்களிடையே எழுந்துள்ள முக்கியமான கேள்வி, எந்த கோர்ஸ் படிப்பது? எந்த கோர்ஸ் படித்தால் எதிர்காலத்தில், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது? இதற்கு கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி அவர்களது விளக்கம்: இனிவரும் காலங்களில், குறிப்பிட்ட பாடப்பிரிவு என்பதை விட, முக்கிய பாடப்பிரிவுகள் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்துள்ளதால், அனைத்து முக்கிய பாடங்களை உள்ளடக்கிய பாடப்பிரிவை, சிறந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொள்ளுங்கள். குறிப்பாக எதிர்காலத்திற்கு க்ளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் இன்றியமையாததாக உள்ளதால், இந்த பாடங்கள் இருக்கும் பிரிவுகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது. எனவே இந்த ஆண்டு, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கம்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக்...