Posts

Showing posts from May 17, 2023
Image
  புதுச்சேரி: சென்டாக் மூலம் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்! புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சென்டாக் மூலம் இன்றுமுதல்(மே 17) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல், நர்சிங், கலை அறிவியல், டிப்ளமோ படிப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், நர்சிங் பாடப்பிரிவுகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளதாக புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.  தொழில் படிப்புக்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 1000 ரூபாயும், கலை, அறிவியல், வணிக படிப்புக்கு 300 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொழில் படிப்புக்கு 500 ரூபாயும், கலை, அறிவியல் படிப்புக்கு 150 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.  மேலும், விவரங்கள் சென்டாக் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
Image
  RTE Admission 2023: நாளை தான் கடைசி நாள்.. கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்க முந்துங்கள் பெற்றோர்களே.. 2023-24ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்றும், இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 872 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, அனைத்து தனியார், சுயநிதி பள்ளிகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023-24ஆம் கல்வி ஆண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியோரின் குழந்தைகளுக்கு சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மையற்ற தனியார், சுயநிதி பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிலும், ஒன்றாம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் முதல் வகுப்பிலும் இடங்கள் வழங்கப்படுகின்றன.  இந்த சேர்க்கை கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கியது. rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம...
Image
  பொறியியல் மாணவர் சேர்க்கை: 1.29 லட்சம் பேர் விண்ணப்பம் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கடந்த 12 நாளில் ஒருலட்சத்து 29 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித் துள்ளனர். பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். 12-வது நாளான நேற்று மாலை6 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 192 பேர்விண்ணப்பத்தை பதிவுசெய்துள் ளனர். அவர்களில் 79,890 பேர் பதிவு கட்டணத்தை செலுத்தியுள்ளனர். 41,552 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர்சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜுன் 4-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
Image
  முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First generation graduate certificate) பெறுவது எப்படி ? தமிழக அரசு, தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி ஆகும், மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொண்டு வருகிறது. கடந்த 2010 ம் வருடத்திலிருந்து இதற்கென தனி அரசாணை பிறப்பித்து இந்தச் சலுகையை மாணவர்களுக்கு அளித்து வருகிறது. அந்த அரசாணையில், ‘அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், பல், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும், ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களின் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையெனில் எந்தச் சாதிபாகுபாடுமின்றி, வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்’ என குறிப்பிட்டுள்ளது. அதாவது அந்த மாணவ-மாணவியின் ‘டியூஷன் ஃபீஸ்’ எனப்படும் கல்விக் கட்டணத்தை மட்டுமே அரசு செலுத்தும்.  உதாரணத்திற்கு, சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கான ஆண்டுக் கட்டணம் இரண்டரை லட்சம் ...
Image
  டெட் தேர்ச்சி சான்றிதழை இ-சேவை மையங்களில் பெறலாம் ஆசிரியா் தகுதித் தேர்வில்(டெட்) தேர்ச்சி பெற்றவா்கள் தங்களுக்கான சான்றிதழை இ-சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியா் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்த வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 2012, 2013, 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 ஆகியவற்றை எழுதி தேர்ச்சி பெற்றவா்களுக்கான சான்றிதழின் மறு பிரதி ஆசிரியா் தேர்வு வாரியம் மூலமாக மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.  இனிமேல், இந்த சான்றிதழை இ-சேவை மையங்களில் பெறும் வசதி மே 15 முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மறுபிரதி சான்றிதழைக் கோரும் விண்ணப்பங்களை ஆசிரியா் தேர்வு வாரியத்துக்கு இனிமேல் அனுப்ப வேண்டாம்.  விண்ணப்பதாரா்களிடம் மறு பிரதி சான்றிதழுக்கான கட்டணத் தொகை ரூ.100; இ-சேவை நிறுவனத்துக்கான சேவை கட்டணத் தொகை ரூ.60 என மொத்தம் ரூ. 160-ஐ செலுத்தி மறுபிரதி சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்த கூடுதல் விவரங்களை சான்றிதழ் கோரும் விண்ணப்பதாரா்களுக்கு வழங்க அனைத்து முதன்மை கல்...