பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் பதவியை நீக்கிடுக.! தமிழக அரசுக்கு கோரிக்கை விடும் ராமதாஸ் பள்ளிக் கல்வி இயக்குநர் அனுபவத்தைக் கொண்டு தான் பள்ளிக் கல்வி இயக்குநர் பொறுப்பை நிர்வகிக்க முடியும்; இ.ஆ.ப. அதிகாரிகளால் நிர்வகிக்க முடியாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் பொறுப்பிலிருந்து நந்தகுமார் இ.ஆ.ப மாற்றப்பட்டதாலும், அந்தப் பொறுப்புக்கு இதுவரை வேறு எவரும் அமர்த்தப்படாததாலும் பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் பதவி நீக்கப்பட்டு, மீண்டும் இயக்குனர் பதவி ஏற்படுத்தப்பட இருப்பதாக கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானது. அது நிறைவேற்றப்பட வேண்டும். பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் நீக்கப்பட்டு, அதன் பொறுப்புகள் அனைத்தும் பள்ளிக்கல்வி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்ட போதே அதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. பள்ளிக்கல்வியில் குழப்பம் பள்ளிக்கல்வி இயக்குநர் என்பது அதிகாரம் சார்ந்த பணிய...
Posts
Showing posts from May 16, 2023
- Get link
- X
- Other Apps
விழுப்புரத்தில் வரும் 19ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மே மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி நடக்கிறது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., - டிப்ளமோ - பி.இ., - பி.டெக்., - நர்சிங், பார்மசி போன்ற கல்வித் தகுதியுடைய இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம். பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் ஆதார் அட்டை மற்றும் சுய விபர குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.