5 ஆண்டு சட்ட படிப்புக்கு விண்ணப்பம். சட்டப் பல்கலையில் ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின் இணைப்பில், 15 அரசுக் கல்லுாரிகள், ஒன்பது தனியார் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவை தவிர, பல்கலை.யின் நேரடி கட்டுப்பாட்டில், சீர்மிகு சட்டக் கல்லுாரியும் செயல்படுகிறது. இந்த கல்லுாரிகளில், பி.ஏ., ---- எல்.எல்.பி., ஐந்தாண்டுப் படிப்பு நடத்தப்படுகிறது. சீர்மிகு சட்டக் கல்லுாரியில், எல்.எல்.பி.,யுடன் இணைந்த பி.ஏ., - பி.பி.ஏ., - பி.காம்.,மற்றும் பி.சி.ஏ., ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு, இன்று துவங்குகிறது; வரும் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 இல், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர், குறைந்தபட்சம், 40 சதவீதம், மற்றவர்கள், 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விபரங்களை, www.tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Posts
Showing posts from May 15, 2023
- Get link
- X
- Other Apps
2023 நெட் தகுதித் தேர்வு.. விண்ணப்பிப்பது எப்படி? நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் 'நெட்' (National Eligibility Test) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் இந்தத் தேர்வு ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்தப்படுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான 'நெட்' தேர்வு ஜூன் 13 முதல் 22ஆம் தேதிக்குள் கணினி வழியில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு மே 10 முதல் தொடங்கியுள்ளது. 'நெட்' தகுதித் தேர்வின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://ugcnet.nta.nic.in/ இல் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து சமர்ப்பிக்கலாம். மே 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளலாம். இணையவழி விண்ணப்பப்பதிவின்போது விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்கள், முகவரி, தேவையான ஆவணங்கள், ஒளிப்படம், கையொப்பம் ஆகியவற்றைப் பதிவுசெய்து இறுதியில் கட்ட
- Get link
- X
- Other Apps
கலை அறிவியல் படிப்புகள்: விண்ணப்பிக்க மே 19 கடைசி! அனைத்தும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்தல், விண்ணப்ப கட்டணம் செலுத்துதல், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தல் என மாணவர் சேர்க்கையின் அனைத்து நடைமுறைகளும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறுவதால், மாணவர்கள் எந்த இடத்தில் இருந்து கொண்டும் அட்மிஷன் பெறலாம். ஒரே விண்ணப்பம் வாயிலாக பல்வேறு கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். இணையவசதி இல்லாத அல்லது உதவி தேவைப்படும் மாணவர்கள், நிர்ணயிக்கப்பட்ட அரசு கலை கல்லூரிகளில் அமைக்கபட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 3 தரவரிசை பட்டியல் தங்களது விருப்பப்படி பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகளை மாணவர்கள் பதிவு செய்துகொள்ளலாம். மாணவர்களது 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளிப்படுகிறது. பொதுவாக, தமிழ், ஆங்கிலம் மற்றும் பொது என 3 விதமான தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழ் தரவரிசை பட்டியல் அடிப்படையில் பி.ஏ., -தமிழ் இலக்கியம் மற்றும் பி.லிட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதேபோல்
- Get link
- X
- Other Apps
ஜிப்மரில் நர்சிங், மருத்துவம் சார் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு புதுச்சேரி ஜிப்மரில் நர்சிங் மற்றும் மருத்துவம் சார்ந்த முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவஹர்லால் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) எம்எஸ்சி, அலைடு ஹெல்த் சயின்ஸ் பாடப்பிரிவில் - 23, எம்எஸ்சி நர்சிங் - 31, எம்பிஎச் (மாஸ்டர் ஆப் பப்ளிக் ஹெல்த்) - 34, பிபிடிஎன் (போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் நர்சிங்) - 19, இதர பட்டமேற்படிப்பு பாடப்பிரிவுகள் - 12 என மொத்தம் 119 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் ஆன்லைன் முறையில் நுழைவுத்தேர்வு நடத்தி நிரப்பப்படுகிறது. அந்த வகையில், 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான மேற்கூறிய பாடப்பிரிவுகளுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூலை 2-ம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறுகிறது. இந்தப் பாடப்பிரிவுகளுக்கு வரும் ஜூன் 14-ம் தேதி மாலை 4.30 மணி வரை மாணவர்கள் 'www.jipmer.edu.in' என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஜூன் 23-ம் தேதி க
- Get link
- X
- Other Apps
' தமிழ்நாடு மக்களுக்கு ஒரு நியாயமான கல்விக்கொள்கை கிடைக்க வேண்டும்' - பேராசிரியர் ஜவகர் நேசன் தேசிய கல்விக்கொள்கையை பின்பற்றாமல் தமிழ்நாடு மக்களுக்கு ஒரு நியாயமான கல்விக்கொள்கை கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் எனவும்; அது நிறைவேறும் வரையில் தொடர்ந்து செயல்படுவேன் என்றும்; நான் விலகியதால் தேசிய கல்விக்கொள்கை 2020க்கு ஆதரவாக செயல்பட மாட்டோம் என குழுவின் தலைவர் தெரிவித்துள்ளதாக என பேராசிரியர் ஜவகர் நேசன் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கான தனித்துவம் வாய்ந்த மாநில கல்விக்கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்தது. அக்குழு கல்விக்கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அந்தக் குழுவில் இடம்பெற்ற பேராசிரியர் ஜவகர் நேசன் உயர்நிலைக் குழு தேசிய கல்விக்கொள்கையை ஒட்டி மாநில கல்விக்கொள்கையை உருவாக்க முயற்சிப்பதாகவும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் தலையீடு குழுவில் இடம்பெறுவதாகவும் குற்றச்சாட்டுகளைக் கூறி உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். இது குறித்து ஜவகர்நேசன் செய்தியாளர்களிடம் தனது குற்றச்சாட்ட
- Get link
- X
- Other Apps
+2வுக்கு பிறகு என்ன படிக்கலாம்? வணிகவியல் படிப்புகள் வளமான வாழ்க்கைக்கு வணிகவியல் படிப்புகள் - CA பிளஸ் 2க்கு பின் தேர்வு செய்யும் கல்விதான், வாழ்க்கைக்கு பயனுள்ளதாக அமையும். தற்போது தமிழகத்தில் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் , 148 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், 424 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 658 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் மூலம் ஆண்டுக்கு 3 லட்சத்து 35 ஆயிரத்து 418 மாணவ, மாணவிகள் கல்வி கற்கின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் குறைந்த செலவில் படித்து முடித்ததும் உடனடியாக வேலை வாய்ப்பு உள்ளதால் கலை, அறிவியல் படிப்புக்கு எப்போதும் மவுசு உண்டு. அதிலும் குறிப்பாக, பிகாம், பிபிஏ, போன்ற பாடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வந்துள்ளது. பொறியியல் படித்தால் அவர்கள் படித்த துறையின் அடிப்படையில் மட்டுமே வேலை கிடைக்கும். தமிழகத்தில் ஆண்டுதோறும் 1.50 லட்சத்துக்கு மேற்பட்ட பொறியாளர்கள் படித்து முடிக்கின்றனர். அவர்களில் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு மட்டுமே நல்ல சம்பளத்துடன் பெரிய நிறுவனங்கள
- Get link
- X
- Other Apps
தமிழ்நாட்டில் 10 நாளில் இன்ஜினியரிங் படிக்க 1 லட்சம் பேர் விண்ணப்பம்: அதிகாரிகள் தகவல் இன்ஜினியரிங் படிக்க இதுவரை 1,05,641 பேர் விண்ணப்பித்துள்ளனர்' என்று மாணவர் சேர்க்கை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5ம் தேதி தொடங்கியது. இதையடுத்து மாணவ, மாணவிகள் https://www.tneaonline.org, https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையங்களிலும் விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 8 நாளில் 91 ஆயிரத்து 38 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் 9வது நாளான நேற்று முன்தினம், 1 லட்சத்தை எட்டியிருந்தது. அதன்படி, 1,00,066 பேர் பதிவு செய்திருந்தனர். அதனைத்தொடர்ந்து நேற்று மாலை நிலவரப்படி விண்ணப்ப பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 1,05,641 ஆக உயர்