பகுதிநேர பிஇ, பிடெக் படிப்புகள் - மே 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மற்றும் பண்ருட்டி பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணையவழியில் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி, பகுதிநேர பிஇ, பிடெக் (4 ஆண்டு) படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக மே 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044-2235 8314/358276 என்ற தொலைபேசி எண் அல்லது dircfa@annauniv.edu என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Posts
Showing posts from May 14, 2023
- Get link
- X
- Other Apps
பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடம் கொள்ளிக்கட்டையே!... ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பள்ளிக் கல்வித் துறை ஆணையர் மாற்றம் நடந்தேறியதில் மிக்க மகிழ்ச்சி! கர்நாடகாவில் ஆட்சி மாற்றமும் தமிழ்நாட்டில் ஆட்சியர்கள் மாற்றமும் ஒருசேர நடந்திருப்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சிறந்த முடிவு! தமிழகக் கல்வி வரலாற்றில் கடந்த ஆட்சியில் தேசியக் கல்விக் கொள்கை அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட பள்ளிக் கல்வி ஆணையர் பணியிடத்தால் ஆசிரியர்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் சொல்லவொணாதவை. எந்நேரமும் ஒருவித பதட்ட நிலையில் படபடப்பு மேலோங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணை என எதேச்சாதிகாரப் போக்குடன் சாட்டைச் சுழற்றித் தொடர்ந்து கற்பித்தல் பணிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் புதிது புதிதாக தேவையே அற்ற செயலிகளை, இணைய தளப் பதிவுகளை, புள்ளிவிவர அறிக்கைகளை, கூடவே கூடுதலான பதிவேடுகளைப் பராமரிக்கச் சொல்லிக் கட்டாயம் வலியுறுத்தி வந்தது என்பது சகிப்பதற்கில்லை. மறைமுகமாகவும் மிக நூதனமாகவும் சனாதனக் கூறுகளையும் கருத்தியல்களையும் வலிந்து புகுத்தி பட்டாம்பூச்சி முதுகில் பாறாங்கல் சுமையாகப் பாடப்புத்தகங்களைக் க...
- Get link
- X
- Other Apps
SI Exam free coaching: செங்கல்பட்டு மாவட்டத்தில் எஸ்.ஐ. தேர்வுக்கான இலவச பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி..? தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் ( TNUSRB ), உதவி ஆய்வாளர் ( Sub inspector ) பணிக்காலியிடங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்த பணிக்காலியிடங்கள் 615 ஆகும். இப்பணிக்காலியிடங்களுக்கு கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இப்பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் வாயிலாக விண்ணப்பிக்க துவங்கும் நாள் 01.06.2023, விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023 ஆகும். இப்போட்டித்தேர்வுக்கான எழுத்து தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 01.07.2023 அன்றைய தேதியில் பொதுப்பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயதுக்கள்ளும் இருக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க www.tnusrb.tn.gov.in இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிப்பது எப்படி? இப்...
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் போட்டித் தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியில் அமர்த்த வேண்டும். ராமதாஸ் கோரிக்கை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை போட்டித் தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியில் அமர்த்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் குறிப்பில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு இரண்டு தேர்வுகள் நடத்தக்கூடாது; ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை போட்டித் தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி சென்னை பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது மனிதாபிமானமற்ற செயல். தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 10 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதற்கு அவர்கள் எந்த வகையிலும் பொறுப்பல்ல. மாறாக கடந்த 9 ஆண்டுகளாக இடைநிலை மற்றும் பட்...