11 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு! தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது அரசுத் தேர்வுகள் இயக்ககம். ஜூன் 19-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 19, 20, 21, 22, 23 ,24, 25, 26 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை 12-ஆம் வகுப்பு துணை தேர்வு நடைபெற உள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், துணைத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்று, ஜூன் 27 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை 11-ஆம் வகுப்பு துணை நடைபெறும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 27, 28, 30, 1, 3, 4, 5 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மத்திய 1.15 மணி வரை 11ம் வகுப்பு துணை தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Posts
Showing posts from May 9, 2023
- Get link
- X
- Other Apps
புதுச்சேரி அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் 6, 7, 8, 9, 11-ம் வகுப்புகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல் புதுவைக்கு தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 2011-ல் என்.ஆர்.காங்., அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற் கொண்டது. 2014-15-ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத்திட் டம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இவ்வாறு கடந்த 2018-19-ம் கல்வி ஆண்டில் 5-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 6-ம் வகுப்பில் இருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டம் விரிவாக்கப்படவில்லை. இந்த கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனுமதி கேட்டு, புதுவை பள்ளிக் கல்வித்துறை சார்பில், மத்தியஇடைநிலை கல்வி வாரியத்திற்கு விண்ணப்பித் திருந்தது. இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "சிபிஎஸ்இ ...
- Get link
- X
- Other Apps
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - முதல் நாளில் 18,332 பேர் விண்ணப்பம் தமிழகத்தில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. முதல்நாளில் 18,332 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விருப்பமுள்ளவர்கள் http: //www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக மே 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ம்தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பின், சேர்க்கை கலந்தாய்வு மே 25 முதல் ஜூன் 20-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், வரும் நாட்களில் விண்ணப்பப் பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- Get link
- X
- Other Apps
நீட் தேர்வு 2023க்கான விடைக்குறிப்பு... விரைவில் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு வெளியாகும் என தகவல்!! நடந்து முடிந்த நீட் தேர்வு 2023-க்கான அதிகாரப்பூர்வமற்ற விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று (மே.07) மதியம் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடந்து முடிந்தது. நீட் வினாத்தாள் 200 கேள்விகளுடன் 720 மதிப்பெண்களை கொண்டிருந்தது, அதில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. நீட் வினாத்தாளில் கிட்டத்தட்ட 24 செட்கள் உள்ளன. மேலும் சரியான பதில்களைக் கண்டறிய பயிற்சி நிறுவனங்களால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற விடைக்குறிப்பை தேர்வர்கள் சரிபார்க்க வேண்டும். தேசிய தேர்வு முகைமையானது ஒவ்வொரு தொகுப்பிலும் வெவ்வேறு கேள்விகளை கேட்டிருக்கும். ஒரு தொகுப்பில் கேட்கப்பட்ட கேள்வி வேறு தொகுப்புகளில் வராது. இந்த நிலையில் தற்போது நீட் தேர்வின் அதிகாரப்பூர்வமற்ற விடைக்குறிப்பு 2023 வெளியாகியுள்ளது. தேர்வு முடிந்து 15-20 நாட்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமான NEET 2023 விடைக்குறிப்பு வெளியிடப்படுவதால், NEET 2023 இன் அதிகாரப்பூர்வமற்ற விடைக்குறிப்பு விண்ணப்பதாரர்கள் த...