
நாடு முழுவதும் நாளை மதியம் நடக்கிறது; நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான விதிமுறைகள்: எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் எவை எவை? தேசிய தேர்வு முகமை வௌியீடு நாடு முழுவதும் 18.72 லட்சம் மாணவர்கள் எழுதும் நீட் தேர்வு நாளை நடக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து 1 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். மோதிரம், வளையல், காதணிகள், மூக்குத்தி, செயின், கண்ணாடிகள், தாயத்து, பெல்ட் உள்ளிட்டவை அணிந்து செல்ல அனுமதியில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் 499 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு நாளை (7ம் தேதி) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க 18 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வை முறையாக நடத்தி முடிக்க தேசிய தேர்வு முகமை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டது. இணையதளம் வாய...