
நீட் தேர்வுக்கு மாணவர்கள் என்ன உடை அணிந்து வரவேண்டும்…? இந்த ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு (NEET UG 2023) மே 7ம் தேதி நடக்க உள்ளது. அந்த தேர்வை சுமார் 21 லட்சம் மாணவர்கள் இந்தியாவிலும் (485 நகரங்கள்) வெளிநாட்டிலும் (14 நகரங்கள்) எழுதுகின்றனர். பேனா மற்றும் பேப்பர் (PBT) முறையில் தேர்வு நடக்கும். நீட் தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் மாணவர்கள் தங்களுக்கென பிரத்யேகமான குடிநீர் பாட்டில்களையும். சானிடைசரையும் கொண்டு வர வேண்டும். குடிநீர் பாட்டில்கள் மற்றும் சானிடைசர் நீங்கலாக அனுமதிச்சீட்டை மட்டுமே மாணவர்கள் எடுத்துச்செல்ல முடியும். 50 விழுக்காடு கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்குள்ளும், இதர 50 விழுக்காடு கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்கு வெளியேயும் கண்காணிப்பில் ஈடுபடுவர். மாணவர்களுக்கான ஆடை மற்றும் கோவிட் கட்டுப்பாட்டு விதிகள் என்னவென்று பார்போம். தேர்வு ஆணையம் தேர்வுக்கு வரும் மாணவர்கள் எந்தவிதமான உடை அணிந்து வர வேண்டும் என்ற கட்டுபாடுகளை விதித்துள்ளது. உடை கட்டுப்பாடு : பெண்கள் முழுக்கை சட்டை அணிந்து வரக்கூடாது அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். ஜீன்ஸ் அணியக் கூடாது. துப்...