அரசு பள்ளி மாணவர்களிடம் நீட் தேர்வு ஆர்வம் குறைந்ததா? - 14,000 பேர் மட்டுமே விண்ணப்பிப்பு தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு கடந்தாண்டை விட இந்தாண்டு குறைவான அரசு பள்ளி மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர். இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் வருகிற 07ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 499 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு மே 07-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு கடந்தாண்டை விட, இந்தாண்டு குறைவான அரசு பள்ளி மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு கடந்தாண்டு 17,972 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 12,840 பேர் தேர்வில் பங்கேற்ற நிலையில், மற்றவர்கள் ஆப்சண்ட்...
Posts
Showing posts from May 2, 2023
- Get link
- X
- Other Apps
நீட் 2023 : அட்மிட் கார்டு விரைவில் வெளியீடு.. வெளியான முக்கிய தகவல்.. நீட் இளங்கலை தேர்வு என்பது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், நர்சிங் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகும். அதன்படி நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.. அந்த வகையில் நடப்பாண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு, மே 7 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. NEET UG தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய நான்கு பாடங்கள் இருக்கும். ஒவ்வொரு பாடத்திலும் 50 பல தேர்வு கேள்விகள் இரண்டு பிரிவுகளாக (A மற்றும் B) பிரிக்கப்படும். தேர்வின் காலம் மதியம் 2:00 முதல் மாலை 5:20 வரை அதாவத 200 நிமிடங்கள் இருக்கும். இத்தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது உட்பட 13 வெவ்வேறு மொழிகளில் நடைபெறும். மொத்தம் 720 மதிப்பெண்...
- Get link
- X
- Other Apps
CBSE Result 2023: சிபிஎஸ்இ 10, 12-ஆம் தேர்வு முடிவுகள், எப்படி சரிபார்ப்பது? சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் 2023: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. அதேபோல் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. இதில் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 21 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதிய நிலையில், 12 ஆம் வகுப்புத் தேர்வை 16 லட்சத்துக்கும் மாணவர்கள் எழுதி இருந்ததனர். இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்படி சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளதால், இதை எப்படிப் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள். சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் 2023ஐச் சரிபார்க்க இணையதளங்கள் 1) cbseresults.nic.in 2) results.cbse.nic.in 3) cbse.nic.in 4) cbse.gov.in சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2023 - ஆன்லை...
- Get link
- X
- Other Apps
பி.இ., பகுதி நேர படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு பி.இ., -- பி.டெக்., பகுதி நேர படிப்புக்கு, வரும், 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அண்ணா பல்கலையின், சென்னை வளாக கல்லுாரிகள், திருச்சி, பண்ருட்டி ஆகிய இடங்களில் உள்ள உறுப்பு கல்லுாரிகள் ஆகியவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகள் பகுதி நேரமாக நடத்தப்படுகின்றன.வரும் கல்வியாண்டில், இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அண்ணா பல்கலையின், http://www.cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தில், 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அண்ணா பல்கலையில் நடத்தப்படும், எம்.எஸ்சி., படிப்பில் சேரவும், 26ம் தேதிக்குள் மேற்கண்ட இணையதளம் வழியாக பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களை, பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
- Get link
- X
- Other Apps
பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இந்த வாரம் முதல் தொடக்கம்!! வரும் கல்வி ஆண்டில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு , இந்த வாரத்தில் இருந்து துவங்குகின்றன . இது குறித்த அறிவிப்பு இரு தினங்களில் வெளியாகும் என உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். வரும் 8 ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இதை அடுத்து உயர்கல்வி சேர்க்கைக்கான பணிகள் பல்வேறு துறைகளிலும் வேகம் எடுத்து இருக்கின்றன. குறிப்பாக, பொறியியல் படிப்பில் அதிக அளவில் மாணவர்கள் சேர்வதால் இது குறித்த எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது . இது தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் கூறும் போது, இன்னும் இரண்டு தினங்களில் ஆன்லைன் பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். நான்காம் தேதியில் இருந்து ஆன்லைன் பதிவு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 402 பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சம் இடங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் பொறியியல் ப...
- Get link
- X
- Other Apps
''பள்ளிப் படிப்பிற்கு பின்னர் உயர்கல்வியை தேர்வு செய்வது எப்படி'' - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி! பொதுத்தேர்வில் மாணவர்கள் மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் மட்டுமே அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக பெற்றோர்கள் கருதக்கூடாது என சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் ஒரு பட்டப்படிப்புடன் கூடுதலாக டேட்டா சயின்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் போன்ற படிப்புகளை கற்றுக்கொண்டால் வேலைவாய்ப்பு உள்ளது என சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 8ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுத மாணவர்களுக்கு வருகிறது. பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்த பின்னர் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை தங்களுக்குப் பிடித்த படிப்பினை படிக்க சொல...
- Get link
- X
- Other Apps
தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்.. அரசு அறிவிப்பு..!!! தமிழகத்தில் அரசு சார்பாக ஏராளமான அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. அதில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளில் சேர D.Ted படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கலப்பு திருமணம், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவைப் பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை விரைவில் நிரப்ப கோரி போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்க கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து, தகுதி சான்றிதழ், விண்ணப்பக் கடிதம், அனுபவச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ்கள் ஆகியவை தேவைப்படும். அதேசமயம் இந்த பணியிடங்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மற்றும் இறுதி தகுதி பட்டியல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படும். இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் ...
- Get link
- X
- Other Apps
APPLY NOW: 7500 அரசு பணியிடங்கள்.. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!!!! SSC சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த 7500 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி மே 3-ம் தேதியுடன் நிறைவடைகிறது. மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு CGL இல் 7500 காலியிடங்களை அறிவித்துள்ளது. ஜூலை மாதம் இதற்கான தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே மூன்றாம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் நேரடியாக இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.