
NEET UG 2023; நீட் தேர்வு இயற்பியல் பிரிவில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? நீட் (NEET UG) தேர்வில் இயற்பியல் பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெற விரும்புபவர்களுக்கு பலவிதமான கோட்பாடு மற்றும் கணித எண் சிக்கல்களின் ஈடுபாடு போன்றவை கடினமாக இருக்கலாம். நீட் தேர்வில் உயிரியல் முதன்மைப் பாடமாக இருக்கும் அதே வேளையில், எளிதான கற்றல் நுட்பம் உயிரியல் பாடத்தில் மாணவர்களுக்குப் பயனளிக்கும், ஆனால் இயற்பியல் பாடத்திற்கு தயாரிப்புத் திட்டத்தில் நடைமுறை பயிற்சி சிறப்பாக இல்லாததால், பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அடிப்படைக் கருத்துகளைப் பயன்படுத்தும்போது, உங்களுக்கு சிரமம் ஏற்படலாம். நீட் தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது, எனவே புதிதாக படிப்பதற்கு நேரம் இல்லை. நீட் தேர்வின் இயற்பியலில் உள்ள அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கும் வகையில், மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் விரைவாகத் தங்கள் தயாரிப்புகளில் தங்கள் நிலையை தீவிரப்படுத்த வேண்டும். இதையும் படியுங்கள்: NEET UG 2023; நீட் தேர்வு வேதியியல் பிரிவில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? சரியான நேரத்தில் முழு பாடத்திட்டத்தையும் முழுமையாக உள்ளடக்கிய ஒரு திறமைய...