இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறை மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விருப்பத்திற்கு இணங்க இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. கோடை விடுமுறை காலத்தில் விருப்பப்படும் குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்கள் மையங்களுக்கு வருகை புரிந்து படிக்கலாம். பொது நூலகங்களில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும் மாணவர்களின் தனித்திறனை வளர்க்கவும் இந்த விடுமுறையைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்கள் அருகில் உள்ள பொது நூலகங்களில் நடைபெறுகின்றன. அங்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். நூலகங்களில் குழந்தைகளை உறுப்பினர்களாக சேர்த்து நூலகங்களிலிருந்து நூல்களை எடுத்துச் செல்லும் பழக்கத்தை ஊக்கப்படுத்துங்கள். இக்கோடை விடுமுறை காலத்தில் தன்னார்வலர்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! மாணவர் சேர்க்கை குறித்த பதிவை இல்லம் தேடிக் கல்வி மொபைல் செயலியில் தவறாது பதிவு செய்யவும். அதிக குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் தன்னார்வலர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.
Posts
Showing posts from April 30, 2023
- Get link
- X
- Other Apps
நீட் தேர்வு 2023; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை.! தேசிய தேர்வு முகமை(NTA), நீட் தேர்வு 2023க்கான தேர்வு நடைபெறும் தேர்வு நகரச் சீட்டை வெளியிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை நடத்தும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை) (NEET) மே 07, 2023 அன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 02:00 முதல் மாலை 05:20 மணி வரை இந்தியா முழுவதும் மற்றும் இந்தியாவுக்கு வெளியே உள்ள நகரங்களில் சுமார் 499 நகரங்களில் காகித முறைப்படி (ஆஃப்லைன்) நடைபெறுகிறது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கான முக்கிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த நீட் நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்த மருத்துவ ஆர்வலர்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in இல் இருந்து தேர்வு அறிவிப்புச் சீட்டைப் பதிவிறக்கலாம் என்று அறிவித்துள்ளது. இதன்படி NEET UG 2023 தேர்வுக்கான நகரச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது உள்நுழை விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, தேர்வு நகர அறிவிப்புச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம், இதில் குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து அடுத்த இரண்டு நாட்களில் அட்மி
- Get link
- X
- Other Apps
குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு: முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்1 பதவிக்கான முதல்நிலை போட்டி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ஆகிய பணிகளை உள்ளடக்கிய 2022-ம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அந்த தேர்வுக்கு 3.22 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர். இ தற்கான, முதல்நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் 2022 நவம்பர் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. 1.9 லட்சம் பேர் மட்டுமே முதல்நிலைத் தேர்வினை எழுதினர். இந்தநிலையில், முதல்நிலைத் தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சியடைந்தவர்களுக்கு குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் ஆகஸ்ட் 10 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. முதன்மைத் தேர்வுக்கு தேர்வு பெற்றவர்கள் 200 ரூபாய் தேர்வு கட
- Get link
- X
- Other Apps
தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பப் பதிவு தேதி அறிவிப்பு.. தமிழ்நாட்டில் அரசு, தனியார் கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 9-ல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி நிறைவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று நேற்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு அடுத்த நாள், அதாவது மே 9ம் தேதி தொடங்கும் எ