2023-24ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..! 2023 24 ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் முதல் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அந்த கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்பு பொது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஜூன் முதல் வாரம் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் தொடங்க இருக்கும் நிலையில் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கும் என்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 18ஆம் தேதி தொடங்கும் என்றும் பதினோராம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 19ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அடுத்த ஆண்டு பொது தேர்வு எழுத மாணவ மாணவிகள் இப்பொழுது முதலில் பொது தேர்வை சந்திக்க தயாராகும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்
Posts
Showing posts from April 28, 2023
- Get link
- X
- Other Apps
CTET 2023 : மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் நாடு முழுவதும் சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET 2023) அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வுகள் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்படும் என்றும், தேர்வுகளின் சரியான தேதிகள் அட்மிட் கார்டுகளில் சேர்க்கப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்த தேர்வு எழுத ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மே 26 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் ctet.nic.in என்ற CBSE CTET இன் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் பதிவு செய்யலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 26 என்றும், தேர்வுக்கான கட்டணத்தை மே 27 வரை செலுத்தலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. CTET - எப்படி விண்ணப்பிப்பது: * தேர்வுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம். * அதிகாரப்பூர்வ இணையதளமான ctet.nic.in என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும். * முகப்புப் பக்கத்தில்
- Get link
- X
- Other Apps
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்புகிறவர்கள் மே 1-ம் தேதி முதல் அதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்குத்தான் மாணவர்களால் அதிக ஆர்வம் காட்டப்பட்டது. அதனால் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் புதிது புதிதாக தோன்றின. அதிக அளவிலான கல்லூரிகளில் அதிக அளவு மாணவர்கள் சேர்ந்து படித்ததால் வருடத்திற்கு பல லட்சம் மாணவர்கள் பொறியாளர்களாக வெளிவந்தனர். ஆனால் அந்த அளவிற்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. படிப்பை முடித்தவர்கள் படிப்புக்கு ஏற்ற வேலையில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வருடங்களாக கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு அதிக அளவில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்காக ஆகும் செலவு நான்கில் ஒரு பங்கு கூட ஆகாது என்பதாலும், கலை அறிவியல் படிப்பு படித்தவர்களுக்கும் கணினி நிறுவனங்கள் சரிசமமான வேலை வாய்ப்பு அளிக்கிறது என்பதாலும் இந்த வகை படிப்புகளுக்கு தற்போது ஆர்வம் அதிகம் ஏற்பட்டு