.jpg)
'நீட் தேர்வு' 1.4 லட்சம் இடங்களுக்கு 20 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பம்.. தமிழ்நாட்டில் எத்தனை பேர்? நாடு முழுவதும் இளங்களை மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் இடங்கள் 1.4 லட்சம் உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் எத்தனை பேர் என்ற விவரமும் வெளியாகி இருக்கிறது. நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனித்தனியே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது. தற்போது மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ந...