Posts

Showing posts from April 26, 2023
Image
 9-12 வரையிலான மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் தரக்கூடாது- புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் 9 முதல் 12 வரை படிக்கும் மாணவர்களுக்கு மாற்று சான்று தரக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உத்தரவிட்டுள்ளது. தவிர்க்க முடியாத பட்சத்தில், இடமாறுதல் சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட ஆய்வு அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   புதுச்சேரியில் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறையக்கூடாது என்பதற்காக புதுச்சேரியில் சில தனியார் பள்ளிகள் சுமாராக படிக்கும் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஏதாவது காரணம் கூறி பள்ளியில் இருந்து நீக்கத்தொடங்கியதாக புகார்கள் வந்தன. இவ்விவகாரம் கல்வித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பள்ளி கல்வி துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் 9, 10, 11,12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், மாணவர்களின் பெற்றோரை மாற்றுச் சான்றிதழ் பெறச் சில தனியார் பள்ளிகள் வற...
Image
  மே 8ம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள்! - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதனால் பொதுத்தேர்வு முடிவுகளை வேறு தேதியில் அறிவிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து நேற்று இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 'மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறுகின்றது. ஏற்கனவே திட்டமிட்டபடி மே 5ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டால், மாணவர்களின் மனம் பாதிக்கப்படலாம் என்பதால், நீட் தேர்வுக்கு பிறகு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும். மே 7 ஆம் தேதி மாலை அல்லது மே 8 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தார்.   இந்த நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடபப்டுவது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வ...